Posts

சிந்திக்க சில நொடிகள்...

எது நவீன முன்னேற்றம்??? நவீன விதை விருட்சமானதா??? மரத்தின் விதை மறைந்துப் போனாதா??? மண்ணிலே விதை விதைத்தவன் மண்ணிலே புதைந்தான்  இதுவா நவீன முன்னேற்றம்??? இயந்திரத்தை மனிதன் இயக்குவது நவீன முன்னேற்றம் - ஆனால் இயந்திரம் மனிதனை இயக்குவது??? கற்கள் விளையாடிய கைகளில் கணினி விளையாடுகிறது இதுவும் நவீன முன்னேற்றம் தான்... ஆனால் நம் பழக்க வழக்கம்??? கண்களில் கண்ட பசுமை இன்று காகிதத்தில் இதுவும் நவீன முன்னேற்றம் தான்... ஆனால் நம் இயற்கை??? நண்பர்களும், உறவினர்களும் அருகே இருக்க நிகழாத பல உரையாடல்கள் சில குறுஞ்செயலிகளில் நிகழ்கிறது இதுவும் நவீன முன்னேற்றம் தான்... ஆனால் நம் பண்பாடு??? திருவிழாக்களில் சுற்றி பறந்ததை மறந்து கைபேசியினுள் பறக்கிறோம் உள்ளங்கையில் உலகம் தான்... ஆனால் நம் பாரம்பரியம்???

தொப்புள் கொடி உறவே

தொப்புள் கொடி உறவே... என்னை தொல்லை செய்யும் அழகே... தொல்லைகளும் அன்பாகிடுமே நீ எந்தன் தோள்களில் சாய்கையிலே... உண்ணும் வேளையில் உருவாகும் சண்டைகளும் அழகாய் உடைந்திடுமே... எந்தன் உருவம் மறைய உந்தன் கண்கள் தேடும் தேடலிலே... அருகில் என்னைக் கண்டால் அடிக்கத்துடிக்கும் விரல்கள்... தொலைவில் விலகி சென்றால் அணைக்கத் துடித்திடுமோ... உன்னையும் அறியாமல் நீ கொண்ட அன்பால்.. நீ என்னை அடிக்க, நான் அழுதால் உந்தன் கண்களில் மலரும் சிரிப்பு... பிறர் என்னை ஒரு சொல் ஏச உந்தன் கண்களில் மலரும் வெறுப்பு... அந்த வெறுப்பும் எந்தன் வரமே... உந்தன் சிரிப்பும் எந்தன் வரமே... நான் உந்தன் தங்கையாய் வாழ்ந்திடும் ஒவ்வொரு நொடியிலும்...

கறைகளும் கலையாகுமே..

அலைகளே கரைகள்    உனக்கு சொந்தமல்ல... இருந்தும் நீ கரையை அடைய ஓய்ந்ததல்ல... பிஞ்சுகளின் மாளிகை கரைகளில் மணமாக... உன் மனதிலோ அது கறையாக...  உன் கறையை அழிக்க கரைக்கு வந்தாயோ...              இல்லை பிஞ்சுகளின் திறமை மறைக்க கரைக்கு வந்தாயோ... திறமைக்கு தூணானால் உன் கறைகளும் கலையாகுமே தினம் ஒரு  மாளிகையிலே... மனக் கறைகளுக்கு தூணானால் உன் கரைகளுக்கும் கணமாவாயே நீ விரும்பும் நொடியிலே...
            அன்றும் இன்றும் நம் நட்பு   தயக்கத்தோடு தொடங்கிய வார்த்தைகள் அன்று... தடையில்லா உரையாடலாய் மாறியது இன்று... அருகில் நிற்க அஞ்சிய நொடிகள் அன்று... அசரும் நொடியில் அடிக்கும் உரிமை இன்று... கேள்விகள் கேட்க சிந்தித்த நொடிகள் அன்று... சிந்திக்க நொடியில்லா கேளிக்கைகள் இன்று... உன்னுடன் நடக்க பிறர் எண்ணம் என்னவோ??? அன்று... யார் எண்ணம் என்னவோ??? நீதான்  நான் இன்று...