சிந்திக்க சில நொடிகள்...

எது நவீன முன்னேற்றம்???
நவீன விதை விருட்சமானதா???
மரத்தின் விதை மறைந்துப் போனாதா???

மண்ணிலே விதை விதைத்தவன்
மண்ணிலே புதைந்தான் 
இதுவா நவீன முன்னேற்றம்???

இயந்திரத்தை மனிதன் இயக்குவது
நவீன முன்னேற்றம் - ஆனால்
இயந்திரம் மனிதனை இயக்குவது???

கற்கள் விளையாடிய கைகளில்
கணினி விளையாடுகிறது
இதுவும் நவீன முன்னேற்றம் தான்...
ஆனால் நம் பழக்க வழக்கம்???

கண்களில் கண்ட பசுமை
இன்று காகிதத்தில்
இதுவும் நவீன முன்னேற்றம் தான்...
ஆனால் நம் இயற்கை???

நண்பர்களும், உறவினர்களும்
அருகே இருக்க நிகழாத
பல உரையாடல்கள்
சில குறுஞ்செயலிகளில் நிகழ்கிறது
இதுவும் நவீன முன்னேற்றம் தான்...
ஆனால் நம் பண்பாடு???

திருவிழாக்களில் சுற்றி
பறந்ததை மறந்து
கைபேசியினுள் பறக்கிறோம்
உள்ளங்கையில் உலகம் தான்...
ஆனால் நம் பாரம்பரியம்???




Comments

  1. Casino Game For Sale by Hoyle - Filmfile Europe
    › casino-games › casino-games › casino-games › casino-games 토토 Casino Game nba매니아 for 출장마사지 sale by 바카라 Hoyle on Filmfile Europe. Free shipping 바카라 사이트 for most countries, no download required. Check the deals we have.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொப்புள் கொடி உறவே