தொப்புள் கொடி உறவே
தொப்புள் கொடி உறவே...
என்னை தொல்லை செய்யும் அழகே...
தொல்லைகளும் அன்பாகிடுமே
நீ எந்தன் தோள்களில் சாய்கையிலே...
உண்ணும் வேளையில் உருவாகும் சண்டைகளும்
அழகாய் உடைந்திடுமே...
எந்தன் உருவம் மறைய
உந்தன் கண்கள் தேடும் தேடலிலே...
அருகில் என்னைக் கண்டால் அடிக்கத்துடிக்கும் விரல்கள்...
தொலைவில் விலகி சென்றால் அணைக்கத் துடித்திடுமோ...
உன்னையும் அறியாமல்
நீ கொண்ட அன்பால்..
நீ என்னை அடிக்க,
நான் அழுதால்
உந்தன் கண்களில் மலரும் சிரிப்பு...
பிறர் என்னை ஒரு சொல் ஏச
உந்தன் கண்களில் மலரும் வெறுப்பு...
அந்த வெறுப்பும் எந்தன் வரமே...
உந்தன் சிரிப்பும் எந்தன் வரமே...
நான் உந்தன் தங்கையாய் வாழ்ந்திடும்
ஒவ்வொரு நொடியிலும்...
என்னை தொல்லை செய்யும் அழகே...
தொல்லைகளும் அன்பாகிடுமே
நீ எந்தன் தோள்களில் சாய்கையிலே...
உண்ணும் வேளையில் உருவாகும் சண்டைகளும்
அழகாய் உடைந்திடுமே...
எந்தன் உருவம் மறைய
உந்தன் கண்கள் தேடும் தேடலிலே...
அருகில் என்னைக் கண்டால் அடிக்கத்துடிக்கும் விரல்கள்...
தொலைவில் விலகி சென்றால் அணைக்கத் துடித்திடுமோ...
உன்னையும் அறியாமல்
நீ கொண்ட அன்பால்..
நீ என்னை அடிக்க,
நான் அழுதால்
உந்தன் கண்களில் மலரும் சிரிப்பு...
பிறர் என்னை ஒரு சொல் ஏச
உந்தன் கண்களில் மலரும் வெறுப்பு...
அந்த வெறுப்பும் எந்தன் வரமே...
உந்தன் சிரிப்பும் எந்தன் வரமே...
நான் உந்தன் தங்கையாய் வாழ்ந்திடும்
ஒவ்வொரு நொடியிலும்...
Comments
Post a Comment