கறைகளும் கலையாகுமே..
அலைகளே கரைகள்
உனக்கு சொந்தமல்ல...
இருந்தும் நீ கரையை
அடைய ஓய்ந்ததல்ல...
பிஞ்சுகளின் மாளிகை
கரைகளில் மணமாக...
உன் மனதிலோ
அது கறையாக...
உன் கறையை அழிக்க
கரைக்கு வந்தாயோ...
இல்லை
பிஞ்சுகளின் திறமை மறைக்க
கரைக்கு வந்தாயோ...
திறமைக்கு தூணானால்
உன் கறைகளும்
கலையாகுமே
தினம் ஒரு
மாளிகையிலே...
மனக் கறைகளுக்கு
தூணானால்
உன் கரைகளுக்கும்
கணமாவாயே
நீ விரும்பும்
நொடியிலே...
உனக்கு சொந்தமல்ல...
இருந்தும் நீ கரையை
அடைய ஓய்ந்ததல்ல...
பிஞ்சுகளின் மாளிகை
கரைகளில் மணமாக...
உன் மனதிலோ
அது கறையாக...
உன் கறையை அழிக்க
கரைக்கு வந்தாயோ...
இல்லை
பிஞ்சுகளின் திறமை மறைக்க
கரைக்கு வந்தாயோ...
திறமைக்கு தூணானால்
உன் கறைகளும்
கலையாகுமே
தினம் ஒரு
மாளிகையிலே...
மனக் கறைகளுக்கு
தூணானால்
உன் கரைகளுக்கும்
கணமாவாயே
நீ விரும்பும்
நொடியிலே...
Comments
Post a Comment